Monday, June 26, 2017

என் கண்ணா

சின்ன எட்டு வைத்து
சிங்கார நடை பயின்று
என்னை அழைக்கையிலே
என்  நெஞ்சம் மகிழுதடா

என் நெஞ்சில்  மேடையிட்டு
நித்தம் நடைபயின்றால் 
உள்ளம் உருகுமடா  - என் கண்ணா

Saturday, August 3, 2013

சுனாமி

கொந்தளித்த கடலின் கோர  தாண்டவத்தில்
நாங்கள் இழந்தது
உயி ர்களை மடடுமல்ல
எங்கள் உறவுகளையும் தான்

வந்த அலைகள் வாரிச்சென்ற
சுவடுகள் மாறிய போதும்
ஆறா வடுக்கள் மட்டும்
மாறாமல் மனதோடு



Monday, May 20, 2013

உள்ளம் உரைத்ததை
உதடுகள் உரைக்க மறுக்கின்றன
என்னவள் நீ என்று


Sunday, February 12, 2012

திருத்தி எழுத இயலா திருக்குறள்

மறித்துவிடு என்று சொன்னால்
மறித்திருபேன் அக்கணமே   - உன்னை
 
மறந்துவிடு என்று சொன்னாய்
மறந்துவிடடேன் அக்கணமே
உன்னை அல்ல நீ உரைத்ததை

அன்பே
என்னால் இயலாது
எடுத்து சொன்னால் புரியாது

திருத்தி எழுத இயலா திருக்குறளாய் 
நீ எனக்கு

Thursday, July 1, 2010

பேருந்து நிறுத்தத்தில்


நான் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன்
சற்றே தொலைவில் ஓர் வெண்ணிலா
வீதி உலா வந்தது
அது கடந்து  சென்ற போது
காணவில்லை என் இதயம்
எடுத்து சென்றவள்
முகம் மட்டும் அறிவேன்
முகவரி அறியேன்
கண்டவர்கள் சொல்லுங்கள் அவளிடம்
இதயமற்ற ஓர் உடல் இங்கே கிடக்குதென்று